அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

புதன், 9 டிசம்பர், 2015

நாட்டின் சகிப்புத்தன்மையை பாதுகாக்க மோடி அரசு முன்வர வேண்டும்:இந்தியன் சோஷியல் ஃபோரம் கோரிக்கை!

நாட்டின் சகிப்புத்தன்மையை பாதுகாக்க மோடி அரசு முன்வர வேண்டும்:இந்தியன் சோஷியல் ஃபோரம் கோரிக்கை!

முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை கடந்த 1992 டிசம்பர் 6ம் தேதி சங்பரிவார கும்பல் இடித்து தரை மட்டமாக்கியதை கண்டித்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்திய முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது.

சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தமிழ் பிரிவின் அல்ஹஸ்ஸா மாவட்டம் சார்பில் அல்ஹஸ்ஸா இஸ்திஹாராவில் பகல் 1 மணிக்கு  நடைபெற்ற பாபர் மசூதி நினைவு தின கருத்தரங்கில் அல்ஹஸ்ஸா கிளை தலைவர் யூசுப்கான் தலைமையேற்று அறிமுக உரையாற்றினார்.முன்னதாக ரபீக் இறைமறை வாசித்தார்.இந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில செயற்குழு உறுப்பினர் அதிரை ரியாஸ் அகமது வரவேற்றார்.

கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் பொதுசெயலாளர் காயல் மக்தூம் நைனா பாபர் மசூதி மீட்பு பாடலை பாடினார்.இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார்.

அவர் தமது உரையின் போது:வேற்றுமையில் ஒற்றுமையே தேசத்தின் பலம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு சமூகத்தவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை உணர்ந்து முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தினார்.

முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் புதுப்பொலிவுடன் கட்டி நாட்டின் சகிப்புத்தன்மையை பாதுகாக்க மோடி அரசு முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

லிபரான் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது முஸ்லிம்களுக்கு செய்துவரும் மிகப்பெரிய அநீதியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் கேரளா,டெல்லி.கர்நாடகா மாநில பிரிவுகளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.இந்தியன் சோஷியல் ஃபோரம் அல்ஹஸ்ஸா பொதுசெயலாளர் ஜின்னா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket