SDPI மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று(22.10.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழகம் மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. தமிழக மக்களும் மின்வெட்டால் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சூர்யமின்சக்தி அணல் மற்றும் அணுமின் சக்திகளை போன்று மக்களுக்கு எந்தவித பாதிப்புகளையும், ஆபத்துகளையும் ஏற்படுத்தாத மின் சக்தி ஆகும் .
சூர்யமின்சக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்ய மத்திய மாநில அரசுகள் இதுவரை உரிய திட்டங்களை செயல்படுத்தவில்லை. அப்படி செயல்படுத்தினால் சூர்யமின்சக்தி மூலம் நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவை பெற முடியும். அதற்க்கான வாய்ப்பும் சூழலும் நமது நாட்டிற்கும் மாநிலத்திற்கும் உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ‘சூர்ய சக்தி கொள்கை 2012 ‘ என்ற திட்டத்தை வெளியிட்டுள்ளார் . மூன்றாண்டுகளில் மூவாயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை பெற கூடிய இத்திட்டம் வரவேற்கத்தக்கது.
இது வெறும் அறிவிப்போடு மாத்திரம் நின்று விடாமல் முழுமையாக் செயல்படுத்த தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டு கொள்கிறேன் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக