அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

புதன், 7 நவம்பர், 2012

அசிங்கமாகப் பேசிய போலீஸ்காரரை அடித்து நொறுக்கிய மாணவிகள்


 பன்ஸ்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நர்ஸிங் கல்லூரி விடுதிக்கு வெளியே கலெக்டர் அலுவலகத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சங்கர் லால் என்பவர் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை அசிங்கமாகப் பேசி கிண்டலடித்துள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகள் அவரைப் பிடித்து அடித்து உதைத்தனர்.  குடிபோதையில் தான் இப்படி செய்கிறார்  என்று நினைத்த மாணவிகள்  பரிசோதனை செய்ய அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பரிசோதனையில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்தது. இதற்கிடையே பொது இடத்தில் அநாகரீகமாக நடந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket