அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய 'நிமிர்ந்து நில் - மண்டியிடாதே' மாபெரும் கருத்தரங்கம்!


இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய 'நிமிர்ந்து நில் - மண்டியிடாதே' மாபெரும் கருத்தரங்கம்!

சவூதி அரேபியா - கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்த SDPI கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி தெஹலான் பாகவி அவர்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் - தமிழ் கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி இந்தியா முழுக்க நடத்திவரும் 'நிமிர்ந்து நில் - மண்டியிடாதே' என்ற பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக தம்மாம் பகுதியிலும் கருத்தரங்கம் நடைபெற்றது.

14-ஜனவரி, 2016 அன்று இரவு 8:30 மணிக்கு அல் கோபர் - ரஃபா மெடிக்கல் சென்டர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு
இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழக தலைவர் காயல் அபூபக்கர் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியை இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழக பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா தொகுத்து வழங்கினார்.

தம்மாம் கிளைத் தலைவர் நல்லூர் சைபுல்லாஹ்  வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து கிழக்கு மாகாணத் துணைத் தலைவர் மௌலவி இக்பால் மன்பஈ அறிமுக உரை ஆற்றினார். 

மாநிலத் தலைவர் மௌலவி தெஹலான் பாகவி அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக தம்மாம், கோபர், சிஹாத், ஜூபைல், அல்ஹஸா கிளைகளின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் சோசியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய தலைவர் சகோ.வசீம்(கர்நாடகா)மற்றும் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் தலைவர் சகோ. சாதிக் மீரான் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் மௌலவி தெஹ்லான் பாகவி  'நிமிர்ந்து நில், மண்டியிடாதே!' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அவர் தமது உரையில் இந்திய தேசிய அளவில் கட்சியின் அவசியத்தையும் அது முன்னெடுத்துச் செல்லும் நேர்மறை அரசியலையும், சமகால அளவில் அனைத்து சமூகத்தினருக்குமான பொதுவான பிரச்சனைகளை அணுகும் முறைகளையும் அழகாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாநிலங்களுக்கான தலைவர் சகோ.வசீம்  தலைவருக்கு நினைவுப் பரிசினை வழங்கி கவுரவித்தார்.

SDPI கட்சியின் அதிகாரப்பூர்வ மாதமிருமுறை பத்திரிக்கையான 'புதிய பாதை' சந்தா சேர்ப்பு இயக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற சந்தாக்களின் முதல் பகுதியை கிளை நிர்வாகிகள் தலைவரிடம் ஒப்படைத்தனர்.

அல்கோபர் கிளைத் தலைவர் அதிரை அபுபக்கர்  நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

தகவல்:கீழை அரூஸி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket