அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

செவ்வாய், 8 டிசம்பர், 2015

தம்மாம் மாநகரில் பாபர் மசூதி என்றும் நம் நினைவில் மாபெரும் கருத்தரங்கம்!



தம்மாம் மாநகரில் பாபர் மசூதி என்றும் நம் நினைவில் மாபெரும் கருத்தரங்கம்!


முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை கடந்த 1992 டிசம்பர் 6ம் தேதி சங்பரிவார கும்பல் இடித்து தரை மட்டமாக்கியதை கண்டித்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்திய முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது.

சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தமிழ் பிரிவின் தம்மாம்-சிஹாத்-கோபார் உள்ளிட்ட மாவட்டங்களின் சார்பில் தம்மாம் பதர் அல் ராபியா ஆடிட்டோரியத்தில் மாலை 7.30 மணியளவில் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் தலைவர் சாதிக் மீரான் தலைமையில் நடைபெற்றது.

சகோதரர் சம்சுதீன் இறைமறை வாசிக்க பொதுசெயலாளர் அப்சர் ஹுசைன் வரவேற்புரையாற்றினார்.நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு அறிமுக உரையாற்றிய தம்மாம் கிளை தலைவர் முகம்மது பைசல் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்டப்படுவதுதான் இந்திய இறையாண்மைக்கு நாடு செய்யும் மரியாதை என்றார்.

சகோதரர் நாகூர் மீரான் சிறப்புரையாற்றினார்.அவர் தமது உரையின் போது:-பாபர் மசூதி இடிக்கப்பட்டு 23 ஆண்டுகளாகியும் இன்னும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றார்.அரபுநாடுகளில் கோயில் கட்ட ஆசைபடும் பிரதமர் மோடி தமது நாட்டில் சங்பரிவாரங்களால் இடிக்கப்பட்ட முஸ்லிம்களின் பாபர் மசூதியை கட்டி கொடுக்க முன்வராதது ஏன்?என்றும் கேள்வி எழுப்பினார்.

கோபார் கிளை செயலாளர் அகமது மீரான் நன்றியுரை கூறினார்.கூட்டத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண ஊடக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,தமிழ் மாநில தலைவர் காயல் அபுபக்கர்,பொதுசெயலாளர் காயல் மக்தூம் நைனா,இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம்,இந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:கீழை அரூஸி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket