அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

புதன், 7 நவம்பர், 2012

ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளையை ஸ்டாலின் சந்தித்தார்

 இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான டெசோ மாநாட்டு தீர்மானங்கள் அறிக்கையை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தின் துணை பொதுச் செயலாளர் யான் லியாசனை சந்தித்து ஏற்கனவே அளித்திருந்தனர்.அதன் தொடர்ச்சியாக நேற்று  ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளையைஜெனீவாவில்  நேரில் சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் சுமார் 35 நிமிடங்களுக்கும் மேலாக பேசியுள்ளனர் என்று திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.அப்போது இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை தொடர்பான கருணாநிதி கையெழுத்திட்டு அளித்திருந்த அறிக்கையினை அவரிடம் அளித்து, இலங்கையில் ஈழத்தமிழர்களின் நிலை பற்றி விவரமாக எடுத்துக் கூறினர்.இந்த விவரங்களை கேட்டறிந்த ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை, , இந்த ஆதாரங்களும், ஆவணங்களும் பத்திரமாக பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.இலங்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையப் பரிந்துரைகள் குறித்து மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டு, இந்தியா ஆதரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எந்தளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சார்பில், தனது தலைமையிலான குழு ஒன்று வருகிற ஜனவரி மாதம் சென்று மேற்பார்வையிட இருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.

அதோடு, கருணாநிதி கையெழுத்திட்டு அளித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளருடன் விவாதித்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket