ப்ளாஸ்டிக்கால் தயாரிக்கப் படும் தேசியக் கொடிக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
இதியாவின் முக்கிய தினங்களான சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக்கினால் தயரிக்கப் படும் தேசியக் கொடிகளே பயன் படுத்தப் படுகின்றன.
அவ்வாறு உபயோகப் படுத்தும் தேசியக் கொடிகளை நிகழ்ச்சி முடிந்ததும், தரையில் வீசி எறியப்படுகின்றன. இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயலாகும் எனப்தோடு ப்ளாஸ்டிக்கால் சுற்றுப்புற சூழலுக்கும் உகந்ததல்ல என்பதை கருத்தில் கொண்டு ப்ளாஸ்டிக் தேசியக் கொடிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்க எந்த காலகெடுவும் அறிவிக்கவில்லை.மத்திய அரசின் பரிந்துரையை அனைத்து அமைப்புகளும் ஏற்கும்பட்சத்தில் பிளாஸ்டிக் கொடியை தயாரிக்க உடனடியாக தடை விதிக்கப்படும்.
மேலும் காகிதங்களில் மட்டுமே சிறிய அளவிலான தேசியக் கொடிகள் தயாரிக்க அனுமதிக்கப்படும் எனவும் மத்திய அர்சு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக