திருப்பூர் கொடிக்கம்பம் அருகில் உள்ள என்.ஆர்.கே. புரத்தைச் சேர்ந்தவர் காட்டன் முத்து (60). 22வது வார்டு அதிமுக கவுன்சிலர்.ஆவார். காட்டன் முத்து 3 முறை கவுன்சிலராக இருந்தவர். நேற்றிரவு வீட்டுக்கு முன்பு கட்டில் போட்டு தூங்கினார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் சிலர் அங்கு வந்து முத்துவின் கழுத்தில் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான அதிமுகவினர் சம்பவ இடத்தில் திரண்டுவிட்டனர். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அரசியல் முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.
அவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும்,. சித்ரா, காந்திமதி என்ற 2 மகள்கள் உள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக