அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி

சென்னை, 
பாஸ்போர்ட் எடுப்பதற்கு எளிமையான விதிமுறைகளை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது.
பொதுமக்கள் சிரமமின்றி ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்து மிக விரைவாக பெறுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் சென்னையில் 3 பாஸ்போர்ட் சேவை மையங்களும் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவை நகரங்களில் தலா ஒரு சேவை மையம் வீதம் மொத்தம் 8 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நகர்புறங்களை சேர்த்து மக்கள் படித்தவர்களாக இருப்பதால் ஆன்–லைன் மூலம் வீட்டில் இருந்த படியோ, கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்றோ பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கிறார்கள்.
ஆனால் கிராமப்புறங்களில் படிப்பு அறிவு இல்லாதவர்கள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க பெரும் சிரமமும், கஷ்டமும் இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி தரகர்கள் பாஸ்போர்ட் எடுக்க ரூ.5000
முதல் ரூ.8000 வரை வசூலிக்கிறார்கள். கிராம மக்கள் எளிதாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வழிவகை காண வேண்டும் என மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன.
இதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பாஸ்போர்ட் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரனுடன் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பாஸ்போர்ட் சேவையை கிராமப்புற மக்களுக்கு சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 264 தாலுகா அலுவலகங்ளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இ–சேவை மையத்தில் ஆன்–லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாளை (21–ந்தேதி) முதல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட்டிற்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்குகிறது.
இதுதவிர தலைமை செயலகம், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை மற்றும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 285 இடங்களில் ஆன்–லைன் சேவை தொடங்குகிறது.
ஆன்–லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு கட்டணமாக மொத்தம் ரூ.1655 ரொக்கமாக வசூலிக்கப்படும். இதில் ரூ.1500 பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் ரூ.100 அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கும் ரூ.55 ஸ்டேட் பாங்கிற்கும் கமிஷனாக பெறப்படுகிறது. இந்த இ–சேவை மையங்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நிறுவகித்து வருகிறது.
இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலகுரு கூறியதாவது:–
கிராமப்புற மக்களுக்காக பாஸ்போர்ட் இ–சேவை மையங்கள் நாளை முதல் செயல்படுகின்றன. அங்கு சரியான ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் சென்றால் அதனை சரி பார்த்து ஆன்–லைன் மூலம் பதிவு செய்வார். பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை நிர்ணயம் செய்து விண்ணப்பத்தினை முறையாக நிரப்பி (ஆன்– லைன் வழியாக) கொடுப்பார். இதற்கான கட்டணம் ரூ.1655 மட்டுமே. இதுபோக எவ்வித செலவும் இல்லை. புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களும், புதுப்பிக்க தவறியவர்களும், குறிப்பிட்ட காலம் முடிந்து மீண்டும் பாஸ்போர்ட் பெற விரும்புவர்களும் அங்கு விண்ணப்பிக்கலாம்.
பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும். கிராமப்புற மக்கள் எவ்வித சிரமமின்றி பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க அரசு இ–சேவை மையங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இடைத்தரகர்களுக்கு இனி வாய்ப்பு இல்லை. விண்ணப்பதாரர்களே நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.                                     

                                                               நன்றி:lalpet.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket