அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

திங்கள், 21 செப்டம்பர், 2015

முஸ்லிம்கள் மீது 3 விரோத போக்கு ‘இந்துத்துவாவின்’ கொள்கை

நடுத்தர இந்து குடும்பத்தினரைப் போலவே, குறிப்பாக குஜராத்திகளைப் போலவே நானும் தேசியம், மதம் சார்ந்த கருத்துகளுடன்தான் வளர்ந் தேன். சிறுவயதாக இருக்கும் போது இந்துத்துவா கொள்கைகளில் ஈர்க்கப்படுவது எளிதான விஷயம் தான். ஏனெனில் அதன் அடிப்படை அப்படிப்பட்டவை. தேசம், கலாச் சாரம் ஆகிய இரண்டும் இந்து மதம் என்ற ஒன்றுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே, ‘இந்து’ என்ற வார்த்தை வெறும் மதத்தை குறிப்பிடுவது மட்டும் அல்லாமல், தேசியம், கலாச்சாரம் ஆகியவற்றையும் தாங்கியதாக உள்ளது.
மற்ற என்னுடைய 20-வது வயதில் சாவர்கர் எழுதிய ‘இந்துத்துவா’ நூலை படித்தேன். ஆனால், ஏமாற்றம் அடைந்தேன். அவரை ஏன் மிகச் சிறந்த மனிதராக கூறுகின்றனர் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த நூல் மிகச் சாதாரணமான உரைநடைபோல்தான் தோன்றி யது. நிபந்தனையற்ற வகையில் நாட்டை நேசிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய முக்கிய கொள்கையாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் நம்மில் பெரும்பாலானோருக்கு அது எளிதாகவே வந்துவிடுகிறது.
மேலும், கோல்வால்கர் பற்றி யும், ஆர்எஸ்எஸ் கொள்கையாளர் தீன்தயாள் உபாத்யாயா ஆகியோ ரின் பேட்டிகள், உரைகளை படித்துப் பார்த்தேன். அவர்கள் எல்லோருமே இந்துத்துவா பற்றியே பேசியுள்ளனர். தங்க ளுக்குள் ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களுடைய கொள்கைகள் உணர்ச்சிப்பூர்வ மாக உள்ளன என்ற தெளிவு பிறந்தது. அதன்பின், இந்துத்துவா பற்றிய சாராம்சத்தை வெறுக்க ஆரம்பித்தேன்.
எதிர்மறையான விஷயங்களை வைத்து எப்படி ‘இந்துத்துவா’ என்ற கொள்கை உருவானது என்று பார்க்கத் தொடங்கினேன். அதற்கு 3 முக்கிய கோரிக்கைகள் இருப்பது தெரிந்தது. 1. ராமஜென்ம பூமி (முஸ்லிம்கள் மசூதி வைத்துக் கொள்ள கூடாது), 2. பொது சிவில் சட்டம் (முஸ்லிம்கள் தங்களுக்கென தனி குடும்ப சட்டங்களை வைத்து கொள்ள கூடாது), 3.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் (முஸ்லிம்கள் அரசியலமைப்பு ரீதியாக தன்னாட்சி அதிகாரத்தை வைத்துக் கொள்ளக் கூடாது) என்ற 3 கோரிக்கைகள் இந்துத்துவாவில் உள்ளன.
ஆனால், இந்த 3 கோரிக்கை களாலும் இந்துக்களுக்கு எந்த சாதகமான விஷயமும் இல்லை. மற்றவர்களை குறை சொல்வதற்காகவே இந்தக் கொள்கை. குழந்தைத்தனமான இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவின் பெயர் செய்திகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. இந்துத்துவா என்பது கலாச்சாரம் பற்றியது என்பதுதான் காரணம். பொருளா தார வளர்ச்சிக்கு இந்துத்துவா எதுவும் செய்யவில்லை. இந்துத் துவா கொள்கையாளர் தீன்தயாள் உபாத்யாயா ஒரு சோஷலிசவாதி என்று கூறுகின்றனர். ஆனால், அவருடைய பொருளாதார ரீதியான யோசனைகளை பாஜக நிராகரித்துவிட்டது.
அதேபோல் அறிவியல் துறைக் கும் இந்துத்துவா எந்த பங்களிப்பும் வழங்கவில்லை. கலாச்சாரத்தை தவிர வேறு எதற்கும் இந்துத்துவா பங்காற்றவில்லை. அதனால்தான் அமைச்சர் மகேஷ் சர்மா போன்றவர்கள் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறுகின்றனர். அறிவியல் துறை அமைச்சரின் பெயர் செய்திகளில் அவ்வளவாக இடம்பெறுவதில்லை. ஏனெனில் அறிவியல் துறையில் இந்துத்துவா ஆர்வம் காட்டுவதில்லை.
அதனால்தான், ‘கீதை, ராமாயணத்தைப் போல குரானும் பைபிளும் இந்தியாவின் ஆத்மாக்களாக இல்லை’ என்று முதலில் அமைச்சர் சர்மா கூறி விட்டு, அப்துல் கலாம் பற்றி அடுத்து கூறுகிறார். ‘டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலைக்கு, முஸ்லிமாக இருந்தாலும் சிறந்த மனிதராக, சிறந்த தேசியவாதியாக, மனிதாபி மானியாக விளங்கிய ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது’ என்கிறார்.
குழந்தைப் பருவத்தில் மதத் தால் ஈர்க்கப்பட்டதன் விளைவுதான் அமைச்சரை அப்படி பேச வைத்துள்ளது. டீன் ஏஜில் சில கொள்கைகளில் ஈர்க்கப்படுவது சகஜம்தான். நானும் அப்படித்தான் இருந்தேன். சிறு வயதில் எளிதில் ஒரு கொள்கையில் ஈடுபாடு ஏற்படும். அதை ஒப்புக் கொள் கிறேன். ஆனால், பெரியவர்கள் ஆனபிறகு இந்த உலகை பெரிய வர்களாகவே பார்க்க வேண்டும். பள்ளி குழந்தைகள்போல அணுக கூடாது.
எனவே, முஸ்லிம்களைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு இந்துக் களைப் பற்றி சிந்தித்திருந்தால் மிகப்பெரிய உதவியாக இருந் திருக்கும். அதுபோன்ற சித்தாந் தங்களை ஏற்பது பற்றி நானும் பரிசீலிப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket