அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

திங்கள், 9 நவம்பர், 2015

பிரிவினை அரசியலுக்கெதிராக வாக்களித்த பீகார் மக்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் நன்றி!

பிரிவினை அரசியலுக்கெதிராக வாக்களித்த பீகார் மக்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் நன்றி!

மதவாத பாஜக அரசு மத்திய ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து இன்று வரை தேசத்தின் பன்முக தன்மையை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்களை முன்னெடுத்து நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாகவே உ.பி.மாநிலம் தாத்ரி கிராமத்தில் மாட்டிறைச்சியின் பெயரால் ஒரு முஸ்லிம் முதியவரை அடித்தும் ,அரியானாவில் இரண்டு தலித் குழந்தைகளை உயிரோடு தீவைத்தும் கொல்லப்பட்டனர்.

பல்வேறு மதம்,மொழி,கலாச்சாரம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய தேசத்தை இந்துத்துவா என்ற மதவாத பிரிவினையின் மூலம் மக்களிடையே வெறுப்புணர்வை விதைத்து மாட்டின் பெயராலும்,கடவுளின் பெயராலும் மனிதனை அச்சுறுத்தும் பாஜகவின் பாசிஸ போக்கு கண்டிக்கத்தக்கதாகும்.

பாஜகவின் மதவாத அரசியலை கண்டித்து டெல்லி மக்கள் தங்களின் வாக்கு சீட்டின் மூலம் தண்டனை கொடுத்தும் கூட கொஞ்சமும் தன்னை திருத்தி கொள்ளாத பாஜகவுக்கு உ.பி மற்றும் கேரள மாநில மக்கள் உள்ளாட்சி தேர்தலிலும் பலத்த தோல்வியை கொடுத்தனர்.

பிரிவினை மற்றும் வன்முறையை மட்டுமே அரசியலில் மூலதனமாக்கி கொண்ட பாஜகவுக்கு தற்போது பீகார் மக்கள் மறக்க முடியாத அளவிற்கு பலத்த சேதாரத்தை தங்களின் வாக்கு சீட்டின் மூலம் கொடுத்து விட்டனர்.

மக்களின் அடிப்படை தேவையான குடிநீர்,மின்சாரம்,சாலை வசதி,மருத்துவம்,கல்வி,வேலை வாய்ப்பு போன்ற பிரச்சினைகளில் அக்கறை செலுத்தாமல் தேவையற்ற விஷம கருத்துக்களையும் அறிக்கைகளையும் தொடராக்கி வரும் பாஜகவின் போக்கு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி விட்டது.

மதத்தின் பெயராலும் மொழியாலும் உணவு பழக்க வழக்கத்தாலும் மக்களை பிரித்து அவர்களிடையே பகைமையை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்று பாஜக இனியும் கனவு காணுமானால்....

பாஜகவிற்கு எதிரான மக்களின் கோபம் தொடர்ந்து ஒவ்வொரு மாநில தேர்தலிலும் இனிவரும் காலங்களிலும் எதிரொலிக்கும்.

பாஜகவின் பிரிவினைவாத அரசியலுக்கு கடிவாளம் போட்டுள்ள பீகார் மாநில மக்களுக்கு சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தகவல் : கீழை அரூஸி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket