அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

செவ்வாய், 6 நவம்பர், 2012

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் SDPI கட்சியின் சார்பில் மாநகராட்சி உதவி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது :


 
சேலம் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உற்பட்ட கிச்சிப்பாளையம் ,பச்சப்படி ,அம்மாபேட்டை ,பொன்னம்மா பேட்டை .அசோக் நகர் ,முஹம்மது புரா,நாராயண நகர் போன்ற பகுதிகளில் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றது ,வைரஸ் காய்ச்சல் ,டெங்கு போன்ற காய்ச்சல்களும் பரவி வருகின்றது .தொடர்ந்து இந்த பகுதிகளில் சுகாதரத்தை மேம்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தன போக்காகவே செயல்பட்டு வருகின்றது .இதற்க்கு முக்கிய காரணங்களாவன ,குப்பை தொட்டிகள் இல்லை ,குப்பை சரிவர அல்லாமல் ரோடுகளில் தேங்கி நிற்கிறது ,கழிவுநீர் செல்வதற்கு சரியான சாக்கடை வசதி இல்லாமை .இதனால் கொசுக்கள் அதிகரித்து வருகின்றது .
மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளிலும் ,சாக்கடைகளிலும் மேய்ந்து வரும் பன்றிகளும் நோய்கள் பரவ முக்கிய காரணமாக உள்ளது .கிச்சிபாளையம் மெயின் ரோடு பல மாதமாக சரி செய்யப்படாமல் மண் ரோடக காட்சியளிக்கிறது .இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.இந்த ரோட்டை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் .
மேலும் மக்கள் அதிகம் நடமாடும் இடமாக உள்ள மூன்று தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் மது பான கடை ,வ .உ .சி மார்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் இவை வழிபாட்டு தளங்களான கோவில்கள் ,மக்கள் அதிகமாக பயன்படுத்த கூடிய இடமாக உள்ளது .இந்த கடைகள் மூலமாக பல்வேறு வன்முறைகள் ,வழிப்பறிகள் ,சண்டை சச்சரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு இந்த பகுதிகளில் சாக்கடை வசதிகளை மேம்படுத்தவும் ,ரோடு வசதிகளை சரி செய்யவும் ,மின் விளக்கு இல்லாத இடத்தில் மின் விளக்குகளை அமைக்கவும் மக்களுக்கு இடையூறாக உள்ள பன்றிகள் ,மற்றும் குப்பைகள் ,கொசு மதுபான கடைகள் இவற்றை அகற்ற கோரி SDPI மாவட்ட தலைவர் முஹம்மது ரபி அவர்கள் சேலம் மாவட்ட மாநகராட்சி உதவி ஆணையரிடம் மனு கொடுத்தார் .இதில் மாவட்ட பொது செயலாளர் ஷெரிப் ,மாவட்ட கிளை நிர்வாகிகள் ,SDPI செயல்வீரர்கள் ஆகியோர் உடன் சென்றனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket