அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

செவ்வாய், 6 நவம்பர், 2012

முகப்பு அறிக்கை கேலரி நிர்வாகிகள் ஊடகம் சேவைகள் செய்திகள் தொடர்புக்கு பஹ்ரைன் குண்டுவெடிப்பு: தஞ்சாவூரைச் சேர்ந்த ஓட்டுநர் பலி


  

மனாமா: பஹ்ரைனில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநர் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்துள்ளார்.
எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து பஹ்ரைனிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவ்வப்போது குண்டு வெடிப்புகளும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
பக்ரைனில் சன்னி பிரிவினர் கையில் தான் ஆட்சி உள்ளது. இந் நிலையில் பெரும்பான்மையினராக உள்ள ஷியா பிரிவினர் தங்களுக்கு ஆட்சியில் அதிக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அதிக ஜனநாயக உரிமைகள் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
இந் நிலையில் பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா, அடில்யா, குதைபியா, ஹூரா ஆகிய இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்திய தூதரகம் இருக்கும் குதைபியா பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஆசிய நாட்டவர் இருவர் பலியானதாக கூறப்பட்டது.இதில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை திருநகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குதைபியா பகுதியில் 10 ஆண்டுகளாக கார் ஓட்டி வந்த அவர் நேற்று சாலையில் கிடந்த பையை தட்டிவிட்டிருக்கிறார். அதில் இருந்த குண்டுகள் வெடித்ததில் உயிரிழந்திருக்கிறார்.குண்டு வெடிப்பில் பலியான திருநாவுக்கரசுக்கு கலைவாணி என்ற மனைவியும், ரத்தீப் (6) என்ற மகனும், கீர்த்தி (1) என்ற மகளும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket