அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

சனி, 17 நவம்பர், 2012

பால்தாக்கரே மரணமடைந்தார்…!!


சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே கடந்த சில தினங்களாக கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவர் இறந்து விட்டார் என்றும்,இல்லை நல்ல நிலையில் உள்ளார் என்றும் இருவேறு தகவல்களால் மக்கள் குழப்பமடைந்தனர். மரணமடைந்த செய்தியால் வன்முறை ஏற்பட்டு விடும் என அஞ்சியே மரணமடைந்த செய்தி வெளியிடபடாமல் மறைக்கப்பட்டது என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில் இன்று (17.11.2012 ) மாலை 3.33 மணிக்கு அவர் மரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அவரைப் பற்றி கடந்த சில தினங்களாக  நிலவி வந்த சந்தேகமும் பரபரப்பும் தீர்ந்துள்ளது.
1922 ல் பிறந்து கார்ட்டுன்னிஸ்ட்டாக   அறியப்பட்டு 1960 ல் அரசியல் என்ற பத்திரிக்கையை துவங்கிய பால்தாக்கரே அரசியலுக்கு வந்து சிவசேனை அமைப்பை ஏற்ப்படுத்தினார். 1987 முதல் மராட்டியம் மராட்டியர்களுக்கே என்ற கோசத்தை முன் வைத்தார். இதன்மூலம் தமிழர்களுக்கும் தென் இந்தியர்களுக்கும் எதிராக வன்முறை ஏற்ப்பட்டது.தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. பல்லாயிரகணக்கான தமிழர்கள் மும்பையை விட்டு வெளியேறினர்.
இதன் பின்  தீவிர இந்துத்துவ அரசியலை மேற்கொண்டார். சங்கபரிவாலர்களின் தலைவர்களில் ஒருவராக தன்னை காட்டி கொண்டார். பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு பகிரங்க ஆதரவை தெரிவித்தார்.
பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடந்து நடைபெற்ற மும்பை கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் நிறுவனங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன . இந்த கலவரத்துக்கு பால்தாக்கரேயின் சிவசேனையை காரணமாக சொல்லப்பட்டது.
கடந்த சில வருடங்களாக வட இந்தியர்களுக்கு எதிராகவும் தனது கருத்துக்களை தெரிவித்து பரபரப்பையும்,பதட்டத்தையும் ஏற்ப்படுத்தினார்.
1995 ல் மகராஷ்டிராவில் ஏற்ப்பட்ட பா. ஜ.க கூட்டணி ஆட்சிக்கு இவரே காரணம் என சொல்லப்பட்டது. .இப்படி பல்வேறு பரிணாமங்களை கொண்ட பால் தாக்கரே இன்று மரணம் அடைந்தார்.
அவரின் குடும்பமும் சிவசேனையும் இன்றைக்கும் மும்பையின் அதிகார பூர்வமில்லாத அதிகார சக்தியாக வளர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket