சிவகங்கை: மருதுபாண்டியர் குருபூஜையின்போது திருப்பசேத்தி சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பசேத்தி சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கடந்த 27ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையாளியை கண்டுபிடிக்க டி.எஸ்.பி மங்களேஸ்வரன் தலைமையில் 10 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விழுப்புரம் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வண்ணாங்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (22), அரியலூர் மாவட்டம் நாகபந்தலை சேர்ந்த மதியழகன்(25) ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் மானாமதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துப்பட்டு, பின்னர் இவர்களில் 5 மாணவர்கள் மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மூன்று மாணவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முக்கிய குற்றவாளியான பிரபுவை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் முக்கிய குற்றவாளியான பிரபுவை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக