அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

சனி, 17 நவம்பர், 2012

இராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்! தமிழக காவல்துறை இணை இயக்குநரிடம் எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை மனு!!


இராமநாதபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடக் கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக இன்று (14-11-2012) காவல்துறை ஏ.டி.ஜி.பி யிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 30 தேவர் குரு பூஜையின்போது நடந்த அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றமும், முஸ்லிம்கள் மீதான வன்முறையும் நடந்தேறியுள்ளது. முஸ்லிம் வியாபாரிகளுக்கு சொந்தமான வியாபார தலங்கள் லட்சக்கணக்கில் சேதப்படுத்தப்பட்டன. இரு சாதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமூக விரோதிகள் மதக்கலவரமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.
இதைப்போலவே கடந்த 7ம்தேதி அன்று மேட்டுப்பாளையத்தில் நடந்த அசம்பாவிதத்தை தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கோவை கரும்புக்கடையைச் சார்ந்த அப்துல் ரகீம் மற்றும் முஸ்லிம்கள் சிலர் இந்துத்துவ சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். முஸ்லிம்களின் வியாபாரத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இராமநாதபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக 1997 – 98 ம் ஆண்டுகளில் நடந்த மதக்கலவரத்தைப் போல மீண்டும் மத மோதல்களை உருவாக்க இந்துத்துவ சக்திகள் முயற்சித்து வருகின்றன.
எனவே தமிழக காவல்துறை நேரடியாக தலையிட்டு இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு முஸ்லிம்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடவும், சமூக விரோதிகளின் மீது கடுமையான, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழக கூடுதல் காவல்துறை இணை இயக்குநர் திரு. ராஜேந்திரன் அவர்களிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது தலைமையில் வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, செயலாளர் எ.கே. கரீம் மற்றும் பசுலுர் ரஹ்மான் ஆகியோர் நேரில் சந்தித்து மனுவை கொடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket