தர்மபுரி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி , கேரள மாநில பொதுச் செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் தலைமையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைநேற்று பார்வையிட்டனர்.
பின்பு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை வழங்கினார்கள். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தமது பேட்டியில்
சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையேயான பிரச்சனை ஜாதிய வன்முறையாக மாற்றப்பட்டு கொண்டாம்பட்டி, அண்ணாநகர் நத்தம் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலித் மக்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளும், பெண்களும் அச்சத்துடன் வெட்ட வெளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த 3 கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை. எதார்த்தமாக நடந்தவை அல்ல என்பது நேரில் ஆய்வு செய்த போது தெரிய வருகிறது. இது ஆதிக்க சக்திகளின் மனோபாவத்தின் வெளிப்பாடு, தீண்டாமை கொடுமையும், ஜாதிய வன்முறையும் தமிழகத்தில் இருப்பதற்கான அடையாளம்.
தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா பிறந்த இம்மண்ணில் ஜாதிய ஒடுக்குமுறை தொடர்வது தமிழகத்திற்கு மாபெரும் இழுக்கை ஏற்படுத்தி தந்துள்ளது ,தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஜாதிய வன்முறையும் தென் மாவட்டங்களில் ஏற்ப்பட்ட கலவரங்களும் தமிழகத்திற்கு மிகப்பெரும் அவமானம் .தமிழக அரசு கலவரங்களையும் ,வன்முறையையும் தடுப்பதிளிருந்து தவறிவிட்டது .எஸ்.டி.பி.ஐ கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது
தமிழக அரசே இத்தகைய ஜாதிய வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை ஏடு ! உண்மை குற்றவாளிகளை கைது செய் !! தமிழகத்தில் இது போன்ற கொடுமைகளும் ,வன்முறைகளும் இனிமேல் நடக்காமலிருக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் ,சேதமடைந்த வீடுகளை அரசு செலவில் புதுபித்துத்தர வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதற்கட்டமாக ரூ.50000 மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை , எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாநில செயலாளர் v.m. அபுதாகிர் மூலம் கொடுக்கப்பட்டது
இரண்டாம் கட்டமாக அத்தியாவசிய பொருட்களான ஆடைகள் ,பாய் ,விரிப்புகள், பக்கெட் போன்ற பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதில் மாநில பொருளாளர் அம்சத் பாஷா,மாநில செயலாளர் அப்துல் சத்தார்,வி.எம்.அபுதாகிர்,செய் தி ஊடகத்துறை மாநில பொறுப்பாளர் செய்யது இப்ராஹீம் கனி,தொழிற்சங்கத்தின் (எஸ்.டி.பி.ஐ) மாநில செயலாளர் அப்துல் கரீம்,மற்றும் சேலம்,ஈரோடு,கோவை ,கிருஸ்னகிரி,தருமபுரி ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக