வெள்ளிக்கிழமை இரவு இந்தியன் சோஷியல் ஃபோரம் அல்ஹஸ்ஸா கிளையின் நிர்வாக குழு கூட்டம் தமிழ் மாநில துணைத்தலைவர் மக்தூம் நைனா தலைமையில் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.கிளை துணைத்தலைவர் கொள்ளுமேடு சவூத் அக்ரம்
முன்னிலை வகித்தார்.
அதிரை ரியாஸ் அகமது வரவேற்றார்.இந்தியன் சோஷியல் ஃபோரம் செய்து வரும் மக்கள் நலப்பணிகள் குறித்தும் எதிர் காலத்தில் அதை அதிகப்படுத்துவது குறித்தும் தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி விளக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்-1) சமீபத்தில் நடைபெற்ற மக்கா விபத்தில் உயிரிழந்த ஹாஜிகளின் வணக்கங்களை இறைவன் பொருந்திக்கொள்ள பிரார்த்திப்பதுடன் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.
தீர்மானம்-2) பக்ரீத் பண்டிகைக்கு அரசு விடுமுறை இல்லை என்று அறிவித்துள்ள அம்மாநில பாஜக முதல்வருக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் முஸ்லிம்களுக்கெதிரான அரசு உத்தரவை திரும்ப பெற வலியுறுத்துகிறது.
தீர்மானம்-3) இந்தியன் சோஷியல் ஃபோரம் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிப்பதுடன் சவூதியில் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு தகுந்த உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிடவும் தீர்மானிக்கப்படுகிறது.
மேற்கண்ட அனைத்து தீர்மானங்களையும் அல்ஹஸ்ஸா கிளைத்தலைவர் மயிலாடுதுறை நாசர் முன் மொழிந்திட நிர்வாககுழு உறுப்பினர் தென்காசி செய்யது அலி வழி மொழிந்தார்.
கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர் நரிப்பையூர் குதுபுதீன் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கிளை பொது செயலாளர் நெல்லை ஜின்னா நன்றியுரை கூறினார்.
தகவல்:கீழை அரூஸி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக