மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது மர்மக் கும்பல் ஒன்று திடீரென வழிமறித்து இரும்புகம்பியால் தாக்கியது. இதில் ஆனந்தன் படுகாயமடைந்தார். உடனடியாக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே ஆனந்தன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உதகையில் ஒருவரின் கடை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கிரீன் பீல்டைச் சேந்த 2 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, உதகை மாரியம்மன் கோவில் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக