அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

வியாழன், 8 நவம்பர், 2012

தமிழக மக்களுக்கு எதிராக ஜெயலலிதாவின் துரோகங்கள்!


சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்றும் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பாக எழுத்துப்பூர்வமான அஃபிடவிட்டை தாக்கல் செய்திருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் ராமேஸ்வரம் வழியாக வர முடியாமல் இருக்கிறது. ராமேஸ்வரம் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் அளவிற்கு அங்கு கடல் ஆழமில்லை என்பதே இதற்கு காரணம்.
இதனால் தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் இலங்கையை சுற்றிக் கொண்டுதான் வர வேண்டி இருக்கிறது. இப்படி கப்பல்கள் சுற்றி வருவதால் பொருட்கள் வந்து சேருவதற்கு ஆகும் காலதாமதம் மட்டுமின்றி, போக்குவரத்து செலவு அதிகரிப்ப தோடு எரிபொருளும் விரயமாகிறது. இலங்கையை சுற்றி கப்பல் வருவதால் இலங்கை அரசிற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதன் காரணமாக இலங்கையில் தொழில் ரீதியான வேலை வாய்ப் பும் அதிகரித்துள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் ஆழ மில்லாத கடல் பகுதிகளை ஆழப் படுத்தினால் கப்பல்கள் இலங்கை சுற்றி தூத்துக்குடி மற்றும் சென் னைக்கு வர வேண்டிய அவசிய மும் இருக்காது. ராமேஸ்வரம் வழியாகவே தூத்துக்குடிக்கும் சென்னைக்கும் செல்லலாம். இதனால் தமிழக அரசிற்கு அதிக வருமானம் கிடைக்கும். ராமேஸ்வரம் முதல் நாகப்பட் டினம் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் அதிக தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
இதுபோன்ற நன்மைகளை கவனத்தில் கொண்டு ராமேஸ்வரம் வழியாக கப் பலை இயக்கும் இந்த திட்டத்தின் பெயர்தான் சேது சமுத்திரத் திட்டம். கடந்த ஐம்பது வருடங்களாக தமிழ் நாட்டிற்கு பல வழிகளில் லாபத்தையும், வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தரும் வகையில் அமைந்த இந்த திட்டத்தை செயல்படுத்தக்கோரி தமிழக மக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசிடம் போராடினர்.
இறுதியாக கடந்த திமுக ஆட் சியின்போது இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனு மதி வழங்கியது. இந்த திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் துவங் கப்பட்டதால், இதை நிறைவேற்றி னால் திமுகவிற்கு மக்கள் மத்தி யில் நற்பெயரும், செல்வாக்கும் அதிகரிக்கும் என்று சுயநலமாகச் சிந்தித்து அரசியல் உள்நோக்கத் தோடு, வஞ்சகமாக சேது சமுத் திர திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றத் தில் அஃபிடவிட் தாக்கல் செய்து தமிழக வளர்ச்சியை தடுத்து மிகப் பெரிய துரோகத்தை செய் துள்ளார் ஜெயலலிதா.
சேது சமுத்திர திட்டத்திற் காக கடலை ஆழப்படுத் தக் கூடாது; அங்கு கடல் நீர் அடியில் ராமரால் கட்டப்பட்ட பாலம் இருக்கிறது என்ற புராண கட்டுக் கதையை உண்மை யாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் பாசிச இந்து மதவெறி அமைப்புக ளோடு கை கோர்த்துக் கொண்டி ருக்கிறார் ஜெயலலிதா.
இந்த மதவெறி அமைப்புகள், சேது சமுத்திர திட்டத்தை ஆரம்பிக்கும் காலத்திலேயே ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே ராமரால் கட்டப்பட்ட பாலம் உள்ளது. அதை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் புகைப் படம் எடுத்து வைத்திருக்கிறது என்று புரளி கிளப்பின. நாசா விண்வெளி நிலையமோ பாலத்தை நாங்கள் படமெடுக்கவில்லை என்றும் உலகின் பல பகுதிகளில் இருப்பது போன்ற மணல் திட்டே ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையிலும் இருக்கிறது என்றும் சொல்லி பாஜக, சங்பரிவாரத்தின் முகத் தில் கரியைப் பூசியது.
ஆனால் பாஜக உள்ளிட்ட சங் பரிவாரங்களோ இராமர் பாலம் இருக்கிறது; அதை இடிக்கக் கூடாது; சேது சமுத்திர திட்டத்தை கைவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தன.
மத்திய அரசு இந்தப் பிரச்சி னைக்கு தீர்வு காண இந்திய தொல்லியதுறை சார்பாக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்தது. ஆய்வு செய்த அந்தக் குழு, ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே கட்டுமான வேலை கள் நடைபெற்றதற்கான எந்தவிதமான தடயமும் இல்லை என்று சொன்னதோடு ராமர் பாலம் கட்டினார் என்பது வெறும் கற்பனைக் கதை என்பதை நிரூபித்தது.
ராமர் பாலம் குறித்த தெளி வான உண்மை இவ்வாறு இருக்க, பாஜக கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு அங்கு மணல் திட்டுகள்தான் இருக்கின்றன என் பதை மறைத்து, மதவெறிப் போக் கோடு இல்லாத ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே வழக்கு தொடுத்ததன் மூலம் பாஜக மட்டுமல்லாமல் அதிமுகவும் மதவெறி கட்சிதான் என்பதை முதல்வர் ஜெயலலிதா நிரூபித்தார்.
அப்போதே தமிழக மக்கள் ஜெயலலிதாவின் மதவெறி போக்கை கண்டிக்காததால் உற் சாகமடைந்த அவர், தமிழக அரசின் சார்பாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தேவை யில்லை என்றும் அங்கே இருப்பது மணல் திட்டு அல்ல; இராமர் பாலம்தான் என்றும் புரட்டு வாதம் செய்து இல்லாத ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்து உள்ளபடியே மதவெறியையும் தாண்டி தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கவே துணிந்து விட்டார் ஜெயலலிதா.
எந்தக் கட்சியானாலும், இயக் கமானாலும் மதவெறிப் போக்கை கடைபிடிப்பது அவர்க ளது சொந்த விருப்பமாகும். மத வெறி போக்கை கொள்கையாகக் கொண்ட கட்சி அல்லது இயக் கத்தை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிப்பார்கள் என்பது தனி விஷயம். அதே சமயம் மதச் சார்பற்ற நம் நாட்டில் இந்து மதவெறி போக்கோடு பாஜக, சங்பரிவார கும்பலுடன் ஜெயலலிதா செயல்படுவதை நடு நிலையான தமிழ்நாட்டு மக்கள் விரும்ப மாட்டார்கள்.
மதவெறி கட்சியான பாஜக வின் மூத்த தலைவர் அத்வானி சென்னை வந்தபோது அதிமுக விற்கும் பாஜகவிற்கும் உள்ள கூட் டணி இயற்கையான கூட்டணி என்று பேட்டியளித்தார். மதச் சார்பற்ற வகையில் நடத்த வேண் டிய அரசை மதவெறி போக்கிற்கு துணையாக்கி தமிழகத்திற்கு துரோகம் செய்து அத்வானியின் கருத்தை உண்மையாக்கியிருக்கி றார் ஜெயலலிதா. மதவெறிப் போக்கை அவர் கை விடா விட் டால் அதிமுகவை தமிழக மக்கள் கை கழுவி விடுவார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண் டும்.
- நாச்சியார்கோவில் ஜாஃபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket