கோவை,நவ.4-
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ரூ.1000 கோடி மதிப்புள்ள வக்புவாரிய சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வக்புவாரிய தலைவர் அ.தமிழ்மகன் உசேன் கூறினார்.
தமிழக வக்புவாரிய தலைவர் அ.தமிழ்மகன் உசேன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரூ.1000 கோடி சொத்துக்கள்
வக்பு வாரியத்தில் ஏற்கனவே 11 தலைவர்கள் இருந்துள்ளனர். நான் 12-வது தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். இந்த 2 மாத காலத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஜமாத் பெறுப்பாளர்கள் மற்றும் முத்தவல்லி ஆகியவர்களை நேரில் சந்தித்து ஜமாத் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். மேலும் வக்புவாரிய சொத்துக்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 140 ஏக்கர் அளவிற்கு வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.242 கோடியாகும். தற்போது சூலூர் பகுதியில் 4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்¢ளது. இதன் மதிப்பு ரூ.52 கோடியாகும். இன்னும் 136 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.200 கோடி மதிப்பிலான வக்பு வாரிய சொத்து மீட்கப்பட்டு அதில் இருந்த 13 கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, சொத்து ஜமாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டு அவைகள் மக்களுக்கு பயன்தரும் வகையிலும் வருமானம் ஈட்டும் வகையிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்புவாரிய சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.1000 கோடி அளவிற்கு உள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உலமாக்கள் நலன்
கோவை நகரில் 60 பள்ளி வாசல்கள் வக்பு வாரியத்தில் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாக தகவல் வந்துள்ளது. வக்பு வாரியத்தில் பதிவு செய்தால்தான் புணரமைப்பு பணிகளுக்கு மானியம் பெற முடியும். எனவே பள்ளிவாசல் நிர்வாகிகள் விரைவில் பதிவு செய்திட முன்வர வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர்தான் உலமாக்களுக்கு தனி நல வாரியத்தை அமைத்தார். இந்த வாரியத்தில் கோவையில் 364 உறுப்பினர்களும், நீலகிரியில் 350 உறுப்பினர்களும், திருப்பூரில் 208 உறுப்பினர்களும், ஈரோட்டில் 162 உறுப்பினர்களும் மொத்தம் 1203 உறுப்பினர்கள் உள்ளனர். சமீபத்தில் தான் இவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. உலமாக்கள் பென்சன் திட்டத்தை 1981 ஆம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார். முதலில் மாதம் ரூ.250 வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது தமிழக முதலமைச்சர் மாதம் ரூ.1000 ஆக உயர்த்தி 1.5.2012 அன்று உத்தரவிட்டார். தமிழகம் முழுவதும் 2400 உலமாக்களுக்கு ஒய்வூதியம் வழங்கப்பட்டதை, 2600 ஆக உயர்த்தியுள்ளார். தமிழகம் முழுவதும் இதுவரை 11 ஆயிரம் உலமாக்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ்மகன் உசேன் கூறினார். டி.பி.எம். முகமதுஷா, எஸ்.பி.காஜாமைதீன் ஆகியோர் பேட்டியின்போது உடன் இருந்தனர்.
நன்றி தினத்தந்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக