எஸ் .டி பி ஐ மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று (23.10.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதனால் பலர் பலியாகிவருகின்றனர் .
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதனால் பலர் பலியாகிவருகின்றனர் .
தமிழக அரசு இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதையே தற்போதைய நிலைமை எடுத்து காட்டுகிறது .
அதிகாரிகள் டெங்கு பாதிப்பு இல்லை என்பதை காட்டுவதில்தான் அக்கறையோடு உள்ளனர். மாறாக டெங்கு அறிகுறி உள்ளவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்குவது பற்றி அக்கறை காட்டவில்லை என்றே மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக 20 .10 .2012 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் (மதுரை)ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது .
அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் உரிய மருந்துகள் கையிருப்பு உள்ளதா என்பதையும், அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகள் முறையாக அனுமதிக்கப்பட்டு உரிய முறையில் சிக்கிச்சை அளிக்கப்படுகிறார்களா என்பதையும் அரசு கவனிக்க வேண்டும் .
முன்னெச்சரிக்கையின்றி செயல்பட்ட அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு எதிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ,அரசு போர் கால அடிப்படையில் செயல்பட்டு டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக